Saturday, 9 December 2017

Lord Ganesha Mantras in Tamil

1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

2. பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா.3. ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து, அடி போற்றுகின்றேனே !
4. அல்லல்போம் வல்லினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்துயரம் போம்- நல்ல
குணமதிகமா மருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.


5. கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.
6. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.


Read More @ https://divineinfoguru.com/slokas-mantras/lord-ganesha-mantras/lord-ganesha-mantras-in-tamil/

No comments:

Post a Comment